தகராறு செய்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது திடீரென இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.