சட்டமன்ற உறுப்பினர் பகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் பகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, தேவகோட்டை காங்கிரஸ் கட்சி வடக்கு தலைவர் வக்கீல் சஞ்சய், அப்பச்சி சபாபதி, தி.மு.க. மாவட்ட துணைத்தலைவர் ரூசோ, தி.மு.க. நகர செயலாளர் பாலா, காங்கிரஸ் கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார். அதன் பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் உக்ரேனில் மருத்துவ படிப்பு படித்து வந்தனர். ஆனால் தற்போது உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வருவதால் மாணவர்கள் தாயகம் திரும்பி வந்துள்ளனர். இதனால் அவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பு தொடங்குவது இயலாது. இந்நிலையில் மாணவர்களின் மேல்படிப்புக்கு இந்தியா ராஜாங்க உறவு வைத்திருக்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேற்படிப்பை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களின் மேல் படிப்புக்கு ஆகும் செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.