சூதாடிய நபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள புதுக்கோட்டையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டாம்புளி பகுதியில் வசித்து வரும் அழகுமுத்து, பட்டுலிங்கம், வெள்ளதுரை, செல்வசுந்தர், மாசாணமுத்து மற்றும் மாணிக்கராஜ் ஆகிய 6 பேரும் அங்குள்ள தபால் அலுவலகத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததாக காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 2,500 பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.