Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டி…. வெண்கல பதக்கம் வென்று திருப்பூர் தொழிலதிபர் சாதனை….!!

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் தொழிலதிபர் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் தற்போது நடைபெற்றது. இந்த போட்டியில் 1300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் திருமலை கார்டன் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் கார்த்திக்தனபால் என்பவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.

அதில் தனிநபர் 50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Categories

Tech |