தமிழக அரசு உத்தரவின்படி தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் சுத்தமான மற்றும் பசுமையான சுற்று சூழலை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1-வது வார்டு பி.வி. தாஸ் காலனி, 3-வது வார்டு ஆர்.எம்.காலனி 80 அடி ரோடு, 8-வது வார்டில் நாயக்கர் புதுத்தெரு 1,2,3 சந்துகள், 12-வது வார்டு கோபாலசமுத்திரக்கரை, 13-வது வார்டு ஜோசப் காலனி, 23-வது வார்டு ஆர்.வி.நகர், 24-வது வார்டு மதுரைரோடு, 28-வது வார்டு அக்னேஸ்மேரி தெரு, 30-வது வார்டு நாகல் புதூர் 1,2,3 சந்துகள், 32-வது வார்டு எழில் நகர், 39-வது பார் நத்தர்ஷா தெரு, 41-வது வார்டு பாஸ்கா மைதானம் (மேற்கு, தெற்கு), பாவனச்சாவடி, 43-வது வார்டு வேடப்பட்டி விரிவாக்க பகுதி, 47-வது வார்டு கலைஞர் நகர், பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் பசுமையான நீடித்த சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு செய்துள்ளனர்.