ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள ஜெயராம் திறன் மேம்பாட்டு மையத்தில் மொபைல் ஆஃப் டெவலப்மென்ட் அண்ட் வெப்டிசைன், சைபர் செக்யூரிட்டி, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், எலக்ட்ரிக்கல் ஆட்டோ காட் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங், உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மையத்தின் மூலம் படித்த 655 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர். சுப்பையா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஐ.இ. சி.டி. இயக்குனர் ராம் கணேசன் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஐ.இ.சி.டி. ராம்கணேசன் தேர்வில் வெற்றி பெற்ற 658 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி பாராட்டியுள்ளார். இதனையடுத்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது உலகம் இந்தியாவிடம் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்துள்ளது. ஏனென்றால் உலகிலேயே இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் இந்த திறன் சார்ந்த வகுப்புகள் எதிர்காலத்தில் ஒரு சுய தொழில் செய்வதற்கு மற்றும் ஒரு தொழில்துறை சார்ந்த வேலைக்கு செல்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.