பேரூராட்சி மன்ற பிரநிதிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து பேரூராட்சி தலைவர்கள் , துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமனராஜ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா, ஊராட்சி தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிதிநிதிகளுக்கு குழந்தைகள் நல மையம் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.