Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பொதுத் தேர்வு…. பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் பகுதியில் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு  படித்த 236 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மேலும் மீனலோசினி என்ற மாணவி  584 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், சீ.வர்ஷா என்ற மாணவி 577 மதிப்பெண்களை பெற்று 2-வது இடத்தையும், செ.ஜோதி காருண்யா என்ற மாணவியும், தி.மது காண்டீபன் என்ற மாணவனும் 573 மதிப்பெண்களை பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.

மேலும் பல மாணவர்கள் இயற்பியல், வேதியல், உயிரியல், கணிப்பொறி அறிவியல் போன்ற பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |