Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. தர்ணாவில் ஈடுபட்ட தாய்-மகள்…. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்…!!

தாய்-மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆலங்குளம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ராஜன் என்பவர் தனது சொத்தை அபகரித்து விட்டதாக புகார் மனு அளித்துள்ளார். அப்போது ராஜனின் தாயார் அமுதா மற்றும் தங்கை ரம்யா ஆகியோர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விதவை உதவித்தொகை, தனிநபர் கடன், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை, பட்டா மாறுதல், அடிப்படை வசதி முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட 248 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |