மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தாசில்தார் சரவன பாபு, ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 87 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பகுதிகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.