மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செவ்வூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது.
இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் காளை மாடுகளை அடக்கினர். அதன் பின்னர் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வந்த பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளனர்.