மருத்துவ காப்பீட்டு முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து வட்டார வள மையத்தின் சார்பாக மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லிமாய், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், வட்டார வள மேற்பார்வையாளர் பிரான்சிஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், வட்டார வள மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் முகாமில் கலந்துகொண்ட 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.