Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர்…. பயன்பெற்ற பொதுமக்கள்….!!

சிறப்பு மருத்துவ  முகாம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் வைத்து அழகப்பா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் கல்லூரி முதல்வர் பெத்தா லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசு, ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த ராசு, மருத்துவர் பிரியங்கா, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் விஜயதாமரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தராஜ் முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து இலுப்பக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |