நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, நீதிபதி முத்துக்குமரன், பாபுலால், சுதாகர், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, மருத்துவர் நவீன் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா முகாமை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாம் அனைவரும் உடல்நலம், மனநலம் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம். இதனையடுத்து சித்த மருத்துவ மரத்தின் இலை, தண்டு பூ, வேர், கீழாநெல்லி போன்றவற்றை வைத்து தயார் செய்யும் கபசுர குடிநீர் கொரோனா, டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தியது.எனவே நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவுகளை உன்ன வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.