Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டி…. முதலிடம் பிடித்து அரசு பள்ளி மாணவர் சாதனை…. குவியும் பாராட்டுகள்….!!

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்கான மாணவர்களை தேர்வு செய்வதற்காக நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அதில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் குணசீலன் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு சென்ற குணசீலனை பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாமல்லபுரத்தில் நடந்த ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குணசீலன் திருப்பூண்டிக்கு வந்துள்ளார். மேலும் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில்  7-ஆம் வகுப்பு மாணவரான அன்பு 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் பள்ளித் தலைமையாசிரியர் ஆறுதுரை கண்ணன் தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான்ஆரிபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |