நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களைப் பிடித்து சென்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிபட்டி கிராமத்தில் முத்தாண்டி கண்மாய் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற திருவிழாவில் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கட்டிலா, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியாக எடுத்து சென்றுள்ளனர்