கல்லூரியில் ரத்தத்தான முகாம் நடைபெற்றுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட யூத்ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் பெஞ்சமின், திட்ட அலுவலர் தேஸ், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ்குமார், செஞ்சுருள் சங்கம் திட்ட அலுவலர் சுரேஷ், உடற்கல்வி இயக்குனர் புலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் மாரிமுத்து முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து திருவாரூர் மருத்துவகல்லூரி ரத்த வங்கி அலுவலர் ப்ரீத்தா மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரத்த தானத்தை பெற்றுள்ளனர்.