Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து  குழந்தை திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். மாலதி நாராயணசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி ஊர்வலத்தை  தொடங்கி வைத்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குழந்தை திருமணம் என்பது பெண்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். இதனால்  குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் ஆண்களுக்கு 20 வயதிற்கு மேலும், பெண்களுக்கு 18 வயதிற்கு மேலும் திருமணம் செய்ய வேண்டும். எனவே  குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது  சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும் பொதுமக்கள் குழந்தை திருமணம் குறித்து 1098 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |