Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…. மேற்கொள்ளப்பட்ட பணிகள்…. பரிசுகளை வழங்கிய நகர்மன்ற தலைவர்….!!

துப்பரவு பணி செய்யும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமுதப்பெருவிழா என்னும் சிறப்பு துப்பரவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, நகராட்சி ஆணையர் லெட்சுமணன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி இன்ஜினியர் கோவிந்தராஜன், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை  தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் அருணாச்சலம் செட்டியார் பகுதியில் அமைந்துள்ள வடிகால் கால்வாய், சிதம்பரம் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில்  சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும்  ஆலங்குடியார்  வீதியில் உள்ள வீடுகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கி  செடி வளர்க்கும் முறைகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனையடுத்து  சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் முத்துதுறை பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.

Categories

Tech |