திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோதிஸ்காந்த்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர் களமாவூர் மேம்பாலம் வழியே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாணவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோதிஸ்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.