தேனியில் மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 75 வயதுடைய சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வடுகம்பட்டி போகும் சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்னாடியே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றனர்.
இதனையடுத்து இருவரும் பொதுமக்கள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி திடீரென்று சரஸ்வதி அணிந்திருந்த 41/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சரஸ்வதி பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.