Categories
லைப் ஸ்டைல்

“நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையுமா”…? ஆய்வு ஒன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். சிலர் மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகாக சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையும் மாலையும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இப்படி உடற் பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறையுமா? என்பது குறித்து அமெரிக்காவின் பிரிஹாம் யங் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது.

ஆய்வின் முடிவில் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறைய வில்லை என்பது தெரியவந்துள்ளது. இது நடைபயிற்சி செய்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. தினசரி நடைப்பயிற்சி செய்வது உடலை சுறுசுறுப்புடன் வைக்க உதவுமே தவிர உடல் எடையை குறைப்பதில்லை என்ற தகவல் இந்த ஆய்வில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் ஆய்வு நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |