தண்டவாளத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள 3-வது நடைமேடைக்கு நேற்று 22637 என்ற எண் கொண்ட வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துள்ளது. இந்த ரயில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பணிமனை நோக்கி சென்றுள்ளது. அப்போது திடீரென ரயில் நிலை தடுமாறியுள்ளது. இதனால் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் ஏற்றி மீண்டும் இயக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.