ரயில்நிலையத்தில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ரயில்நிலைய நடைமேடையில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் தஞ்சையை சேர்ந்த அன்பரசன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் பட்டமங்கலத்திலுள்ள தனது மனைவி வீட்டில் தங்கியிருந்ததும், பின் தஞ்சைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அன்பரசன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.