Categories
தேசிய செய்திகள்

நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்து ரத்து… தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

கமல்நாத் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. தப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத், அதே தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகின்ற இமார்டி தேவியை பாலியல் ரீதியாக மிக தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமல்நாத் நட்சத்திரப் பேச்சாளர் என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

அதற்கு எதிராக கமல்நாத் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த மனு மூன்று நீதிபதிகள் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் கமல் நாத்தின் நட்சத்திர பிரசாரகர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதுமட்டுமன்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 77 வது பிரிவின் கீழ் ஒரு கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எங்கே அதிகாரம் இருக்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கமல் நாத்திற்காக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

 

Categories

Tech |