Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்தனர்

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நட்சத்திரம் ஆமையை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி அருகே சிலர் வனத்துறைனரால் தடை செய்யப்பட்ட அரிய வகை நட்சத்திரம் ஆமையை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவந்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர், சாக்குப்பைகள் நட்சத்திரம் ஆமைகளை வைத்துக்கொண்டு, அரியலூர்ரை  சேர்ந்த விஜய், அன்பரசு, சின்னசாமி, செந்தில் 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து நட்சத்திரம் ஆமையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வீதம், 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், கடத்தளுக்கு பயன்படுத்திய லாரியும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |