தமிழகத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் நோய்த்தொற்று நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளையும் அரசு தீவிரமாக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது அதிகப்படியாக சென்னையில் இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமைக்ரான் பாதிப்பால் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது விதி முறைகளை கடைப்பிடிப்பது அவசியம். மேலும் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.