சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் எடப்பாடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.