Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நட்பாக பேசிய மாணவி…. செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாய் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சாய் முத்து அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவியுடன் நட்பாக பேசி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாய் முத்து வற்புறுத்தியுள்ளார்.

மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாய் முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |