கோழி நாய் குட்டியை உப்பு மூட்டை தூக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டு உப்பு மூட்டை. விளையாட்டாக மட்டுமல்லாமல் பாசத்துடன் தங்கள் குழந்தைகளையும் பெற்றோர்கள் உப்பு மூட்டை தூக்கி உப்பு உப்பு யாருக்கு வேணும் உப்பு எனப்பாடி குழந்தைகளை மகிழ்விப்பார்கள்.
அனைவருக்கும் பிடித்தமான இந்த உப்பு மூட்டை விளையாட்டு விலங்குகளுக்கு பிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.தற்போது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் உப்பு மூட்டை தூக்கும் காட்சி தான் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதில் ஆச்சரியமும் உள்ளது.
தி பீல் குட் பேஜ் எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான அந்த காணொளியில் வெள்ளை நிற நாய்க்குட்டி ஒன்று சிவப்பு நிற கோழியின் முதுகில் ஏறி அமர்ந்து கொள்கிறது. நாய்க்குட்டியை சிவப்பு நிற கோழி உப்பு மூட்டை தூக்கியதை பார்த்து அனைவரும் சோ ஸ்வீட் என சொல்லி வருகின்றனர். கோழியும் நாய்க்குட்டியும் நட்புடன் பழகுவதை இணையவாசிகள் பாராட்டுகின்றனர்.
https://twitter.com/i/status/1323949874103070721