சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ‘நட்புடன் உங்களோடு மனநல சேவை’ என்ற திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்துடன் தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற தொலைபேசி எண்ணையும் அறிமுகம் செய்து வைத்தார். மனநலம் தொடர்பான ஆலோசனைகள், மனநல ஆலோசகருடன் வீடியோ ஆலோசனைகள், சிகிச்சைகள் தொடர்பான வழிமுறைகள் குறித்து அறிய இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகளுக்கான துறையோடு இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படும். இது போன்ற சுகாதார துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டு வரும் ஏராளமான இலவச சேவை எண்கள் மூலமாக மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி சுமார் 2 லட்சம் பேர் வரை தொடர்பு கொண்டு நிவாரணம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.