Categories
தேசிய செய்திகள்

நட்புடன் பழகிய பெண்ணிற்கு…. 2 வருடமாக நடந்த கொடுமை…. போலீசுக்கு போனதால் தீயிட்டு கொளுத்திய இளைஞன்…!!

இரண்டு வருடமாக பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

ஜெய்ப்பூரை சேர்ந்த லேக் ராஜ் என்பவர் பெண் ஒருவரிடம் பழகி வந்தார். நட்புடன் பழகிய பெண்ணை தவறாக புரிந்து கொண்ட லேக் ராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் அந்த பெண்ணிற்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு காணொளியாக பதிவு செய்து அதைக் காண்பித்து சுமார் இரண்டு வருடங்களாக தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

தான் அழைக்கும் இடத்திற்கு அந்த பெண் போக மறுப்பு தெரிவித்தால் சமூக வலைத்தளத்தில் காணொளியை பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து தொடர்ந்து அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லேக் ராஜின் தொல்லை பொறுக்க முடியாத பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான லேக் ராஜ் தீபாவளி அன்று பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றார். அக்கம்பக்கத்தினர் பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கும் நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து லேக் ராஜ் அவரது சகோதரர்கள் மற்றும் தந்தை என 4 பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |