நட்பு பாடலை ரசித்து கொண்டே ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் காரில் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
‘பாகுபலி’ படத்தை இயக்கி பிரபலமடைந்த எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Spotted! Bheem and Ramaraju hooked onto the #Dosti song…🤝🤩#RRRMovie
Post a video of you and your friend listening to the song and tag us ! #Natpu #Priyam pic.twitter.com/s9IX2DnCZz
— RRR Movie (@RRRMovie) August 11, 2021
டிவிவி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாடலான ‘நட்பு’ பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நட்பு பாடலை ரசித்து கொண்டே ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் காரில் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.