அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம் தொடங்குகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்திய கால்பந்து அணி தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதோடு பக்ரைன் மற்றும் பெலாரஸ் அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் பக்ரைன் தலைநகரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்த்தும் இதைத்தொடர்ந்து வரும் 26 தேதி பெலாரஸ் அணியுடனும் விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும்.
மேலும் இந்த போட்டிகளில் பங்கேற்கும் 25 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 7 வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம் பெற்றவர்கள் எனவும் பிராப்சுகான் கில், ஹோர்மிபாம் ரிவாக், அன்வர் அலி, ரோஷன் சிங், சுஹைர், டானிஷ் பாரூக், அன்கெட் யாதவ் ஆகியோர் புதுமுக வீரர்களாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.