Categories
சினிமா தமிழ் சினிமா

நட்பெல்லாம் கிடையாது… நான் பார்த்து வளர்ந்த பெண்… நடிகை கஸ்துரி ட்விட் …!!

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலின் திருமண பேச்சை தொடங்கியது முதல் இந்த விவகாரம் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்து வருகிறார். இவர்களின் திருமணத்திற்குப் பின்னால் பல பிரச்சினைகள் எழுந்தன. பீட்டர் பால் மனைவி அவரை பிரிந்த பின் வனிதா மற்றும் பீட்டர் பால் மீது இவர்களுக்கு எதிராக பல பேட்டிகளை கொடுத்து சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கினார். இதுகுறித்து நடந்த விவாத நிகழ்ச்சியில்… வனிதாவிற்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் நடந்த  வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா பலமுறை தகாத வார்த்தையில் திட்டியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படியே போனால் வனிதா மீது இன்னும் 8கோடி போலீஸ் கேஸ் குடுக்கணும் போலியே.. என்று பதிவிட்டார். அதற்க்கு நெட்டிசன் ஒருவர் நீங்களும் வனிதாவும் ஒரு காலத்தில் நண்பர்கள் தானே என்று பதிலளித்தார்.

நெட்டிஷனின் கேள்விக்கு… வனிதாவிடம் நட்பு இல்லை என பதிலளித்துள்ளார் நடிகை கஸ்தூரி ட்விட் மூலம் பதிலளித்திருந்தார். இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்விட்டில்… வனிதா நான் பார்த்து வளர்ந்த பெண். வனிதா மீது எந்த பகையும் காழ்புணர்ச்சியும் எப்போதும் இருந்ததில்லை. வனிதா அவர்கள் பொதுவெளியில் பலரையும் கொச்சையாக பேசி காயப்படுத்தி வருகிறார். அவரது இந்தப்போக்கை மாற்றிக் கொண்டால் இப்போதும் அவருக்கு உதவியாக இருக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |