லண்டன் ரயில் நிலையத்தில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
லண்டனில் உள்ள பெர்மோன்ட்சே வெஸ்ட்மினிஸ்டர் அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் ஒரு நபர் பெண்ணிடம் செல் போனை பிடுங்கிக்கொண்டு ஓடிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதாவது அந்த பெண் ரயிலில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது ஒரு ஆண் வந்து அவரிடம் பேசியிருக்கிறார். அவர் தன் நண்பர் ஒருவருக்கு அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி அந்த பெண்ணிடம் செல்போனை கேட்டுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் அந்த பெண்ணிடம் செல்போனை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அந்தப்பெண் வலுக்கட்டாயமாக அந்த நபரிடம் இருந்து செல்லை வாங்கிவிட்டு அதிக கூட்டமிருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அந்த ஆணும் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்று அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கிக்கொண்டு இறங்கி வேகமாக தப்பியோடியுள்ளார். தற்போது அந்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டால் என்ன நடந்தது என்பது தெரியும் என்று கூறியுள்ளனர்.