மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்திலுள்ள வசாய் என்ற பகுதியில் சிகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 வயதில் மனைவி உள்ளனர். அதே ஊரில் இவருக்கு இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் சிகாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். இவர்களுக்கு சிவாவின் மனைவி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சிகா வீட்டில் இல்லாததை தெரிந்து அவர்கள் அங்கு சென்றனர்.
அப்போது சிவாவின் மனைவி கணவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். அதை முன்னரே தெரிந்து கொண்டுதான் இருவரும் வந்தோம் என்றும் கூறி கதவை அடைத்தனர். அதன் பிறகு அந்த அப்பாவிப் பெண்ணை அடித்து உதைத்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.அந்த அப்பாவிப் பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. அதன்பிறகு இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இதையடுத்து சிகாவின் மனைவி தனக்கு நேர்ந்ததை கணவனிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். இது குறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து நீதிமன்ற இருவரையும் வருகின்ற நவம்பர் 13 தேதி வரை போலீஸ் காவலில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.