மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பவுன்குமார் தனது நண்பரான சம்பத் என்பவருடன் சேர்ந்து திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பவுன்குமாரின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பவுன்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.