பிரபல நடிகரான சித்தார்த்திற்கு தளபதி விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்பே கிடைத்தது. ஆனால் சித்தார்த் அப்போது எக்கச்சக்கமான படங்களில் நடித்து கொண்டிருந்தார். எனவே அவரால் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதாவது அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஷங்கர் சித்தார்த்தை வைத்து “பாய்ஸ்” என்ற படத்தை இயக்கி வந்தார்.
இந்த திரைப்படத்தின் மூலம் தான் சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இயக்குனர் ஷங்கர் மீண்டும் பல வருடங்கள் கழித்து “நண்பன்” படத்தில் சித்தார்த்தை தான் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்திருந்தார். ஆனால் சித்தார்த் அப்போது பல படங்களில் பிஸியாக இருந்தார். எனவே சித்தார்த் கதாபாத்திரத்தில் இயக்குனர் ஷங்கர் ஜீவாவை நடிக்க வைத்துள்ளார்.