Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பன் போல பேசி நடித்து… வீட்டில் உள்ள பொருட்களை…. திருடிய வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

திண்டிவனம் அருகில் வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் 54 வயதான முருகேசன். இவரது  செல்போனிற்கு ஓரு நபர் போன் செய்து பேசி நண்பன் ஆகியுள்ளார். இதையடுத்து இருவருமே  நட்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில்  அந்த நபர் முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த நபர் முருகேசன் வீட்டில் இருந்த பைக், செல்போன், டிவி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து முருகேசன் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் திண்டிவனம் காவல்துறையினர் வழக்கு பதிந்து மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர் திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணம் அடுத்த கழிகுளத்தை சேர்ந்த ஏழுமலை மகன் 31 வயதான சுந்தரேசன் என்பது தெரியவந்தது. மேலும் முருகேசன் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இவர்தான் என்று தெரியவந்தது. அதன்பின் சுந்தரேசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |