Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. தவறாக பேசிய அக்கம்பக்கத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் பெயிண்டரான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் வினோத்குமாருக்கும், அவரது நண்பரின் மனைவியான 33 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தில் வினோத்குமார் அங்கு சென்று அவரது மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த நண்பர் மனைவியையும், வினோத்குமாரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இரண்டு பேரும் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் அப்பகுதியை சேர்ந்த பலருக்கு இந்த விஷயம் தெரிந்தது. அவர்கள் வினோத்குமார் மற்றும் அந்த பெண்ணை தவறாக பேசத் தொடங்கியுள்ளனர்.

நேற்று முந்தினம் வினோத் குமார் நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் நம்மால் சேர்ந்து வாழ முடியாது. சாவிலாவது ஒன்றாக இணைவோம் எனக்கூறி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதனை அடுத்து இரண்டு பேரும் குளிர்பானத்தில் தின்னரை கலக்கி குடித்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |