ஆட்டோ டிரைவர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் காவிரி ராஜபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை சாலை ஓரத்தில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது.ஆட்டோவின் அருகில் ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கனகம்மாசத்திரம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது இறந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகையா என்பது தெரியவந்தது. நேற்று அவர் திருத்தணி அருகே பணப்பாக்கம் கிராமத்தில் இறந்த தன்னுடைய தோழர் முனுசாமியின் துக்க நிகழ்வுக்காக வந்த நிலையில் சாலையோரம் பிணமாக கிடந்தார் என தெரியவந்தது. அவர் மது அல்லது விஷம் குடித்து இருக்கலாம் என்றும், காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர் இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா ஏற்று காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.