வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி காமராஜர் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவானந்தமும் அவரது நண்பரும் மாத சீட்டு பணம் கட்டி வந்தனர். கடந்த சில மாதங்களாக நண்பர் சீட்டு பணம் கட்டாததால் அவருக்கான சீட்டு பணத்தையும் சேர்த்து சிவானந்தம் கட்டி வந்துள்ளார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்டு நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே வந்த சிவானந்தம் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பிரேமா உறவினர்களுடன் இணைந்து தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் சிவானந்தத்தின் உடல் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது சார் சிவானந்தத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.