Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் குளிக்க சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்ரப் அலி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சாந்தோம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அஷ்ரப் அலி தனது நண்பரான டேனியல் என்பவருடன் வெற்றி நகர் அருகே இருக்கும் மெரினா கடற்கரை குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கடலில் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென வந்த ராட்சத அலை அஷ்ரப் அலியை கடலுக்குள் இழுத்து சென்றது.

இதனை பார்த்து அதிர்ச்சடைந்த டேனியலின் அலறல் சுத்தம் கேட்டு ஓடி வந்த மீனவர்கள் அஷ்ரப் அலியின் சடலத்தை மீட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற மாணவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |