Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற பள்ளி மாணவன்… இரவில் மோட்டார் சைக்கிள் பயணம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கிறான். 12 வகுப்பு படித்து வந்த அவர், கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் பைபாஸ் சாலையில் இருக்கின்ற பட்டாசு கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு தனது நண்பரான திருவாரூர் அப்பாபிள்ளை தெருவை சேர்ந்த 21 வயதுடைய நிஷாந்த் என்பவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அவர்கள் வாழ வாய்க்கால் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது நாகையில் இருந்து திருவாரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்து திடீரென ராகுல் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. அந்த விபத்தில் பின்புறம் அமர்ந்து கொண்டிருந்த ராகுல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நிஷாந்த் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |