இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உப்புகோட்டையை அடுத்துள்ள மாணிக்காபுரத்தில் அஜ்மல்கான் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் உப்புகோட்டையை சேர்த்த தனது நண்பரான ஸ்ரீதருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சடையால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருத்த போது எதிரே வந்து கொண்டிருத்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் அஜ்மல்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து பின்னால் அமர்ந்து கொண்டிருந்த ஸ்ரீதருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அக்கம்பக்கத்தினர் ஸ்ரீதரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே டிப்பர் லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரபாண்டி காவல்துறையினர் அஜ்மல்கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைதொடர்ந்து விபத்துகுறித்து வழக்குபதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த அஜ்மல்கானின் உறவினர்கள் உடனடியாக டிப்பர் லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சடையால்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே அங்கிருந்து கலைத்து சென்றுள்ளனர்.