Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு புதுச்சேரிவிளை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் சுஜின்(22) என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுஜின் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜின் தனது நண்பரான ஜினு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கல்லுப்பாலம் சிவன் கோவில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் விழுந்தது, இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |