மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜபாளையத்தில் உள்ள உரக்கடையில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது நண்பரான முனீஸ்வரன் என்பவருடன் சேர்ந்து ராஜபாளையம்-தென்காசி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கோபாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.