Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

நண்பரை பார்க்க சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சித்தாளந்தூர் வடக்கு பாவடி பகுதியில் வெற்றிசெல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சிவில் என்ஜினீயரிங் 3-ஆம் ஆண்டு படித்து வரும் இவர் தனது நண்பரை பார்பதற்க்காக இருசக்கர வாகனத்தில் மணியனூருக்கு சென்றுள்ளார். அப்போது மணியனூர் மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த வெற்றிசெல்வனை மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெற்றிசெல்வன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நல்லூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |