Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நண்பரோடு பேசிய காதலி…! தம்பியோடு சேர்ந்து… காதலன் அரங்கேற்றியகொடூரம்…. புதுவையில் பலியான கல்லுரி மாணவி ….!!

புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாடு அருகே தூக்கி வீசி தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுர் அடுத்த சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்ஸ்ரீ என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. அங்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் கல்லூரி மாணவி ராஜேஷ்ஸ்ரீ என்பதைக் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து கொறையூர்பேட் பகுதியை சேர்ந்த பிரதேஷ் என்ற இளைஞரையும், அவரது பதினைந்து வயது சகோதரரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பிரதீஷை  ராஜேஷ்ஸ்ரீ காதலித்து வந்ததும், அப்போது தன் நண்பரிடம் ராஜேஷ்ஸ்ரீ  பேசியதை பிரதீஷ் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராஜஷ்ஸ்ரீரியை தன் சகோதரருடன் சேர்ந்து கொலை செய்த பிரதேஷ் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ப்ரதீஷையும்,  அவரது சகோதரரையும் கைது செய்தனர்.

Categories

Tech |